குளித்தலை அடுத்த, புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில், செட்டிப்பாளையம் கிராமத்தில், தென்னையை தாக்கும் பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து, விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கப்
பட்டது.
கரூர் வேளாண் இணை இயக்குனர் சிவசுப்ர
மணியன் தலைமை வகித்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். பொள்ளாச்சி ஆழியார்
தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானி (பூச்சியியல்) வினோத்குமார் முன்னிலை
வகித்தார்.
அவர், ''விவசாயிகளுக்கு தென்னையில் ஏற்படும் பூச்சி நோய் தாக்கத்தை ஒருங்கிணைந்த முறையில், சாகுபடி தொழில் நுட்பங்களை கையாள்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்,'' என, தெரிவித்தார்.
தொடர்ந்து, தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிகளான காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண்வண்டு, கருந்தலை புழு மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் பாதிப்பு மற்றும் எவ்வாறு அவற்றை கட்டுப்படுத்துவது என்பது குறித்து, விரிவாக தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், கருந்தலை புழுக்கள் மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து, தென்னை மரங்களுக்கு தேவையான சத்து, நுண்ணுாட்ட சத்து வழங்கி, அதிகளவு மகசூல் பெறுவது குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.