சராசரி மாணவர்களும் சாதிக்கலாம்! அதிக வருமானம் ஈட்டித்தரும் மெரைன் படிப்பு
Added : மே 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


கோவை : 'செய்முறை படிப்புகளை மையமாக கொண்ட மெரைன் கேட்டரிங் படிப்பை தேர்வு செய்தால், சராசரி மாணவர்களும் குறைந்த வயதில் அதிக வருமானத்துடன் சாதிக்கலாம்' என, மதுரை சுப்புலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி மெரைன் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட்' துறை தலைவர் சுரேஷ்குமார் பேசினார்.


மேலும், அவர் பேசியதாவது:

கப்பல்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. குறிப்பாக, சராசரி மதிப்பெண் பெறும் மாணவர்களும், மெரைன் கேட்டரிங் படிப்பை தேர்வு செய்து, நல்ல வேலைவாய்ப்பை பெறலாம். நிறைவான சம்பளம், மகிழ்ச்சியான வாழ்க்கை இப்பணியில் உண்டு. சமையல் என்பது கலை. 90 சதவீதம் செய்முறை பயிற்சிகளே பாடத்திட்டங்களாக உள்ளன. மனஅழுத்தம் இன்றி எளிதாக படிப்பை முடிக்கலாம்.
பிளஸ் 2 வகுப்பில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்திருந்தாலும், இத்துறையை தேர்வு செய்யலாம். மருத்துவ தகுதி இதில் அவசியம். பார்வையில் நிற குறைபாடு உள்ளவர்கள் இப்படிப்பை தேர்வு செய்ய இயலாது. படித்தவுடன் கப்பல் மட்டுமின்றி, ஐந்து நட்சத்திர ஹோட்டல், ராணுவம், மருத்துவத்துறை, விமானத்துறை போன்றவற்றிலும் பணிவாய்ப்பை பெறலாம். பணியோடு சேர்த்து, உலகளாவிய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது. குறைந்தபட்சம், 63 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியை துவங்கி,மூன்றே மாதங்களில் ஊதியம் உயர்ந்துவிடும்.
பெண்களும் இத்துறையில் சாதிக்க முடியும். கல்லுாரியை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். படித்தவுடன் வேலையில் சேர, பாஸ்போர்ட், சி.டி.சி., எஸ்.டி.சி.டபிள்யு., சான்றிதழ்கள் கட்டாயம் தேவை. இவற்றை கல்லுாரிகளே ஏற்பாடு செய்து தரவேண்டும். மேலும், கல்லுாரிக்கான கட்டமைப்பு, ஆசிரியர் தகுதி, ஆய்வகம், நீச்சல் குளம் போன்ற வசதிகளும் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். மேலும் இத்துறை சார்ந்த தகவல்களுக்கு,90035-08016 என்ற எண்ணில் அழைக்கலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.

'அனிமேஷன் துறையில் அசத்தல் வாய்ப்புகள்'
அனிமேஷன் மற்றும் மீடியா துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து, சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி அனிமேஷன் துறை தலைவர் கிஷோர்குமார் பேசியதாவது:மனதுக்கு பிடித்த படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். ஆர்வம் இருந்தால் மட்டுமே எந்த துறையிலும் சாதிக்கலாம்.
அனிமேஷன் மற்றும் மீடியா துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. கற்பனைக்கு எட்டாத விஷயங்களை கண்முன் கொண்டு வருவதே அனிமேஷன். விளக்கை தேய்த்தால் பூதம் வரும் என்ற காலம் போல், இன்று மொபைலை தேய்த்தால் நம் கண் முன் அனைத்தும் வருகிறது. இதற்கு காரணம் அனிமேஷன் மட்டுமே. இன்றைய காலகட்டத்தில் ஊடகங்களின் தாக்கம் அதிகளவில் உள்ளது.
ஓவியக்கலை, கற்பனைத்திறன், தொழில்நுட்ப அடிப்படையிலான அறிவு ஆகியவை அடிப்படை தகுதிகளாக உள்ளன. மீடியா மற்றும் அனிமேஷன் துறைகள் பலருக்கும் பிடித்த துறையாக உள்ளன. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு இருந்தால், இத்துறைகளில் சாதிக்கலாம். இதுதவிர, பத்திரிகை துறைகளிலும், வாய்ப்புகள் உள்ளன. அனிமேஷன், மீடியா துறையை தேர்ந்தெடுக்கும் முன் அவை பல்கலைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அதன்பின் கல்லுாரியின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்கள், பாடத்திட்டம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்வது அவசியம்.
புத்தக படிப்பு மட்டும் போதாது. செயல்வழிக் கல்வி என்பது மிகவும் முக்கியம். துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து தெரிந்து அதற்கேற்றார் போல், கூடுதல் கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு தமிழகத்தில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. இதனால், இங்கு வாய்ப்பும் அதிகம். குறிப்பாக, '2டி' மற்றும் '3டி' துறைகளில் வாய்ப்புகள் அதிகம். சினிமா, 'டிவி' ஆகிய துறைகளில் மீடியா, அனிமேஷன் சார்ந்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம்.இவ்வாறு, அவர் பேசினார்.

'அனைவரும் அறிந்த மொழியை பேசினால் நாம் ஹீரோ'
சி.ஏ., மற்றும் வணிகவியல் படிப்புகளின் எதிர்காலம் குறித்து ஆடிட்டர் சேகர் பேசியதாவது:
சீக்கிரம் படித்து அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. வாழ்வின் உண்மை தெரியாமல், தவறு செய்து கொண்டுள்ளோம். சமுதாயத்தில் அனைத்து படிப்புகளும் முக்கியமே. ஒவ்வொரு படிப்புக்கும் முக்கியத்துவம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு தொழிலுக்கும் முக்கியத்துவம் உள்ளது. எந்த படிப்பாக இருந்தாலும் அதில் முதன்மையாக வரவேண்டும். படிப்பதை கசடற படிக்க வேண்டும். எந்த ஊரில் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை, எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம்.
நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் தான் உள்ளது. நாடு முழுவதுமான போட்டியை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். நாடு முழுவதும், 2 லட்சம் மாணவர்கள் உங்களுடன் போட்டியிடுகின்றனர். போட்டி உலகில் இருந்து வருகிறோம். எனவே பெற்றோர் மாணவனுக்கு பிடித்த படிப்பை படிக்க தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த படிப்பில் தேசிய அளவில் முதலிடம் பிடிக்க உழைக்க வேண்டும். உலகளவில் போட்டியிட வேண்டும். நன்கு ஆலோசித்து பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
நம் எதிர்காலம் குறித்து எதிர்மறையாக பேசுபவர்களை விட்டு விலகி விட வேண்டும். சாதிக்க பிறந்த நமக்கு உழைப்பு மட்டுமே தேவை. நிதியை நிர்வகிப்பது தான் வணிகவியல். பணம் இருக்கும் வரை, வணிகவியல் இருக்கும். வணிகவியலில் உலகளவில் வாய்ப்புகள் அதிகம். இந்திய வணிகவியல் துறை உலகளவில், 10 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது. வணிகவியலுக்கு மூன்று சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. வணிகவியல் படித்தால் உலகை ஆளலாம்.
பிளஸ் 2 முடித்த பின் சி.ஏ., படிப்போர் எண்ணிக்கை அதிகம். எதிலும், தொடர் பயிற்சி இருந்தால், மட்டுமே வெற்றி கிடைக்கும். சி.ஏ.,வில் அதிகளவில் படிக்க வேண்டும். ஆனால், அது கடினமான படிப்பு இல்லை.சி.ஏ., முடித்தால் நல்ல வருவாய் கிடைக்கும். இதுதவிர, நேரடியாக ஆராய்ச்சி படிப்பிலும் சேரலாம். இந்த துறையில் மதிப்பெண்கள் எளிதாக பெற தொடர்ந்து கற்பது அவசியம். யாரும் நம்மை கவனிக்கவில்லை என, நம் பணியை செய்யாமல் இருக்கக் கூடாது. வங்கி துறையில் சாதிக்க ஹிந்தி மொழி தெரிவது அவசியம். அனைவரும் அறிந்த மொழியை பேசினால் நாம் ஹீரோ.
இவ்வாறு, அவர் பேசினார்.

'பாடத்திட்டம் தாண்டி படித்தால் வாய்ப்பு தேடி வரும்'
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:
கல்லுாரி படிப்பை துவங்கும் போது இருக்கும் அதே தொழில்நுட்பம், படிப்பை முடித்து வரும்போது இருக்காது என்பதை மணவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். எதிர்கால வளர்ச்சிகளை ஆராய்ந்து தற்போது துறையை தேர்வு செய்யவேண்டும். துறைகளுக்கு என்ற தனிமதிப்பு தற்போது இல்லை. எந்த துறை படித்தாலும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப திறனை மேம்படுத்திக்கொண்டால் மட்டுமே வாய்ப்புகள் என்பது இனி கிடைக்கும். வளாக நேர்காணலில் வேலையை எதிர்பார்த்து கல்லுாரிக்கு செல்லவேண்டாம்; இனி வரும் நாட்களில், 70 சதவீத வேலைகள் போட்டிகள் வாயிலாக தேர்வு செய்யப்படும்.
வளாக நேர்காணல் கலாசாரம் இனி இருக்காது. தற்போதுள்ள ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ், பைத்தான் போன்றவற்றை மட்டும் படித்தால், 4.5 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை கிடைக்கும்; இதில் ஒரு பலனும் இல்லை. தற்போதுள்ள ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் ஐந்தாண்டுக்கு பிறகு மாற்றங்கள் பெற்று இருக்கும். மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை நாம் 'அப்டேட்' செய்துகொள்ளவேண்டும். புதிய தொழில்நுட்பங்களை தேடி கற்றுக்கொள்ளும் மாணவர்கள் ஆண்டுக்கு, 40 லட்சம் ஊதியத்தில் முன்னணி நிறுவனங்களில் பணியில் சேரலாம்.
'கூகுள்' போன்ற முன்னணி நிறுவனங்கள் அளிக்கும் தொழில்நுட்ப சான்றிதழ் படிப்புகளை முதலாமாண்டு முதல் கூடுதலாக படிக்கவேண்டும். பாடத்திட்டங்களை மட்டும் படித்தால் போதாது. ஜப்பானிஷ், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழி ஒன்றை கற்றுக்கொண்டால் வாய்ப்புகள் பரந்துவிரிந்ததாக இருக்கும். துறைகளை காட்டிலும் கல்லுாரிக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்யுங்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு அதிக வாய்ப்புகள் உருவாகி வருகிறது.
பொறியியல் 'கட் ஆப்' நடப்பாண்டில் குறையும். அதே சமயம் கடந்த ஆண்டு மாணவர்களும் போட்டியாளர்களாக வரும் சூழல் உள்ளது. வாய்ப்பை தேடிச்செல்பவர்கள் வெற்றி பெறமுடியும்; வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்கள் வெற்றி பெற முடியாது. எம்.பி.பி.எஸ்., கிடைக்காத மாணவர்களுக்கு நேரடியாக அடுத்தகட்ட தேர்வு பொறியியல் படிப்பாக இருக்கவேண்டும்.
பொறியியல் அடுத்து, மீன்வளர்ச்சித்துறை, கால்நடை மருத்துவம், நேச்ரோபதி, பேஷன் டிசைன் ஆகிய படிப்புகளுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு அதிகம். அதே சமயம், ஒரு துறை படித்தாலும் ஒருங்கிணைந்த பல்துறை தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X