தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத்தலைவர் நவலடி தலைமை வகித்தார்.
மாநில பிரச்சார செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுசுகாதாரத்துறை மாநில பொதுச்செயலாளர் சுரேஷ், ஊரக வளர்ச்சித்துறை மாவட்டத்தலைவர் இனியவன், மருத்துவத்துறை மாநில பொதுச்செயலாளர் ஜெகநாதன், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணைத்தலைவர்கள் குணசேகரன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், 2003ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 2022ம் ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை, மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.