அடிப்படை வசதி கோரி மேயர் காரை முற்றுகையிட்ட மக்கள் | மதுரை செய்திகள் | Dinamalar
அடிப்படை வசதி கோரி மேயர் காரை முற்றுகையிட்ட மக்கள்
Added : மே 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
Latest district News

மதுரை: மதுரை மாநகராட்சி 97 வது வார்டு திருப்பரங்குன்றம் துர்கா காலனியில் சுகாதார நல மையக் கட்டடம் கட்டுவதற்கு இன்று (மே 26) பூமி பூஜை நடைபெற்றது. மதுரை மேயர் இந்திராணி தலைமையில் நடந்த பூமி பூஜை நிழச்சியில் அப்பகுதி மக்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து தனது காரில் கிளம்பிய மேயரை காரை அப்பகுதியினர் முற்றுகையிட்டனர்.

சுகாதார நல மையம் அமையவுள்ள பகுதியில் இருக்கும் பொது கழிவறை 10 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பூட்டி கிடக்கும் நிலையில் அதனை சரிசெய்யாமல், சுகாதார நல மையம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை. மேலும் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முற்றுகையிட்டனர். பின்னர், அவர்களுடன் மேயர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X