ரெங்கேஸ்வரா கல்வி நிறுவன ஆண்டு விழா வாரியத்தேர்வு சாதனையாளர்களுக்கு பாராட்டு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
ரெங்கேஸ்வரா கல்வி நிறுவன ஆண்டு விழா வாரியத்தேர்வு சாதனையாளர்களுக்கு பாராட்டு
Added : மே 26, 2022 | |
Advertisement
 



நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிப்பட்டி ரெங்கேஸ்வரா கல்வி நிறுவனங்களில், ஆண்டு விழா நடந்தது. கல்வி நிறுவன பெருந்தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் ஆறுமுகம் வரவேற்றார். தாளாளர் சுப்ரமணி, துணைப்பெருந்தலைவர் சாந்தி, இணைச்செயலாளர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகேஸ்வரி, சிவக்குமார் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். விழாவில் கவிஞர் அருள்பிரகாஷ் பங்கேற்று பேசியதாவது:
மாணவர்கள் தனக்கு பிடித்த செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும். ஒவ்வொரு மாணவர்களிடமும் தனித்தனி ஆற்றலும், திறமைகளும் உள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வருவது கல்லுாரிகளின் பணி. மாணவன், ஒரு செயலை செய்வதற்கு, மனதளவில் தயாராக இருக்க வேண்டும். 'கல்வி' என்னும் மூன்றெழுத்தை வைத்து, 'கல்' 'கவி' 'வில்' என்னும் மூன்று வார்த்தைகள் உருவாகிறது. இதில் 'கல்' - ஆரம்பக் கல்வி, 'கல்'லில் எழுத்து போலவும், 'கவி' - மேல்நிலைக்கல்வி, 'கவி' போலவும், 'வில்' - உயர்நிலைக்கல்வி, 'வில்'லைப் போன்று, லட்சியத்தை அடைய உதவுவதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், அக்., 2021ல் நடந்த வாரியத்தேர்வில், 700க்கு, 700 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்த, 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, விருதுகள் மற்றும் பரிசு வழங்கப்பட்டன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி செயலாளர் வேலுசாமி நன்றி கூறினார். அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X