பெருந்துறை, வெள்ளகோவில் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 1.46 கோடி ரூபாய்க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.
பெருந்துறை வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் நேற்று, 2 ஆயிரத்து, 846 மூட்டை தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 80.60 ரூபாய் முதல், 94.29 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் கிலோ, 35.55 ரூபாய் முதல், 82.15 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது. மொத்தம், 1.38 லட்சம் கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு, 1.12 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
*வெள்ளகோவில், லாலாபோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், வில்வதாம்பட்டி, பகுதி விவசாயிகள், 118 பேர், 46 ஆயிரம் கிலோ எடை கொண்ட, 878 தேங்காய் பருப்பு மூட்டைகளை, வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்
கூடத்திற்கு கொண்டு வந்தனர்.
விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடீஸ்வரன் முன்னிலையில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தரமான முதல் தர பருப்பு அதிகபட்சமாக கிலோ, 81.55 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் கிலோ, 61.40 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 34 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.