காஞ்சிபுரம் : தேர்வு முடிந்து பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள், சிறுவர்கள் ஏரி, குளம், ஆறுகளுக்கு சென்று குளித்து விளையாடுகின்றனர்.
காஞ்சிபுரம் செவிலிமேட்டில் இருந்து மிலிட்டரி சாலை வழியாக ஓரிக்கை நான்கு முனை சந்திப்பு பகுதிக்கு செல்லும் வழியில், வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சாலையோரம் உள்ள மரத்தின் கிளை நீண்டு வளர்ந்து, வழிகாட்டி பலகையை மறைத்துள்ளது.இதனால், வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய திசையில் திரும்பாமல், மாற்று ஊருக்கு செல்லும் நிலை உள்ளது. வழிகாட்டி பலகை இருந்தும் வாகன ஓட்டிகளுக்கு பயன் இல்லாமல் உள்ளது. எனவே, வழிகாட்டி பலகையை மறைக்கும் சாலையோர மரக்கிளையை அகற்ற வேண்டும் அல்லது மரத்திற்கு பின் பக்கம் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையை மரத்திற்கு முன் பக்கத்தில் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.