மனைவி சாவுக்கு காரணமானவர் பிடிபட்டார் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
மனைவி சாவுக்கு காரணமானவர் பிடிபட்டார்
Added : மே 26, 2022 | |
Advertisement
 

கொடுங்கையூர் : சென்னை, கொடுங்கையூர், எழில் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம், 46. இவரது மனைவி சுமதி, 2006ல், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்தார்.



இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்ட சுந்தரலிங்கம்,நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகஇருந்தார். இவரை பிடிக்க, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.இதையடுத்து, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் தனிப்படை அமைக் கப்பட்டது.

இந்த நிலையில், துாத்துக்குடி மாவட்டம், திசையன்விளை கிராமத்தில் சுந்தரலிங்கம் தலைமறைவாக இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.இதையடுத்து, தனிப்படை போலீசார், சுந்தரலிங்கத்தை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். மேலும் கொடுங்கையூர் போலீசார் சுந்தரலிங்கம் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X