காஞ்சிபுரம் : அட்மா என, அழைக்கப்படும் வேளாண் தொழில் நுட்பம் சார்பில், சிறிய அளவிலான நாட்டுக்கோழி குஞ்சு பொரிப்பு மேலாண்மை குறித்து, ஒரு நாள் பயிற்சி நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிபாக்கம் வட்டார வளர்ச்சி கூட்ட அரங்கில், நேற்று முன்தினம் நடந்த பயிற்சி முகாமிற்கு, காஞ்சிபுரம் வேளாண் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் சிவபெருமாள் தலைமை வகித்தார்.ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய இணைப் பேராசிரியர் முனைவர் ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிறுகாவேரிபாக்கம், வாலாஜாபாத் வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாளர்கள் புவனா, ராணிசந்திரா மற்றும், 80 விவசாயிகள் பங்கேற்றனர்.