பி.எப்., பணம் கையாடல்அதிகாரி மீது வழக்கு பதிவு
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:கோவையில் தனியார் நிறுவன ஊழியர்களின் பி.எப்., பணத்தை கையாடல் செய்த, மத்திய அரசு அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை, பாலசுந்தரம் ரோட்டிலுள்ள மண்டல பி.எப்., அமலாக்கப்பிரிவு அதிகாரி மைதிலி தேவி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர், தொழிலாளர்களின் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:கோவை பி.எப்., அலுவலகத்தில், அந்தோணி குருதி என்பவர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் கோவையிலுள்ள, 2 தனியார் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பணியாற்றும், 28 ஊழியர்களின் பி.எப்., பணத்தை, வேறு சிலரின் வங்கி கணக்குகளுக்கு சட்டவிரோதமாக மாற்றி உள்ளார். தனியார் நிறுவன ஊழியர்களின் பி.எப்., பணத்தை கையாடல் செய்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதனால் அந்தோணி குருதி மீது, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டிருந்தது.புகாரின்பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் அந்தோணி குருதி மீது மோசடி உட்பட, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

இது குறித்து, பி.எப்.,அமலாக்கப்பிரிவு அதிகாரி மைதிலிதேவி கூறுகையில், ''எங்களது பணி அமலாக்கம். வங்கிக்கணக்கிலிருந்து பணியாளர்களின் வங்கிக்கணக்கிற்கு சரியான தொகை செல்கிறதா என்று கண்காணிப்பது. அதோடு, இது தொடர்பாக வரும் புகார்களை விசாரிப்பதும் எங்கள் பணிதான். அந்த வகையில் பணியாளர்களுக்கு போய் சேர வேண்டிய தொகை, ஒரே வங்கிக்கணக்கிற்கு திரும்ப திரும்ப சென்றதால், அந்தோணி குருதி எளிதில் அகப்பட்டுக் கொண்டார்,'' என்றார்.


 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X