''நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளை, துவக்க நிலையில் கண்டறிந்தால், அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்,'' என்கிறார், கே.எம்.சி.எச்., நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் தீபக்.
சளியில் ரத்தம், தொடர் இருமல், அடிக்கடி மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஆகியவை நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள். 'எண்டோபிராங்கியல் அல்ட்ரா சவுண்ட்' பரிசோதனை மூலம், நுரையீரல் புற்றுநோய் கட்டிகளை கண்டுபிடிக்கலாம்.புற்றுநோய்களை 'பிராங்கஸ்கோபி' கருவி மூலம் கண்டறியலாம். துவக்க நிலையில் கண்டறிந்தால், நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
முற்றிய நிலையில் இருந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தி, இயல்பு வாழ்க்கைக்கு தயார்படுத்த தேவையான சிகிச்சை முறைகள், கே.எம்.சி.எச்.,ல் உள்ளன.காசநோய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோயால், நுரையீரலை சுற்றி நீர்கோர்க்கும். இதனால், மூச்சு திணறல், இருமல் ஏற்படும். நுரையீரலில் நீர் கோர்த்துள்ளதை, தொரகோஸ்கோப்பி' கருவி மூலம் கண்டறிந்து அகற்றலாம்.
உடல் பருமன் உள்ளவர்களுக்கு, குறட்டை வியாதி ஏற்படுகிறது. குறட்டையால், நுரையீரலுக்கு தேவையான ஆக்ஸிஜன் குறைந்து, மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுகிறது. 'ஸ்லீப் ஸ்டடி'என்ற பரிசோதனையில், துாக்கத்தின் பாதிப்பு கண்டறியப்படுகிறது. பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்ப, குறட்டையை குறைப்பதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.