மனநலம் பாதித்தவர்களுக்கு...தனிப்பிரிவு: அரசு மருத்துவமனையில் துவக்கம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
மனநலம் பாதித்தவர்களுக்கு...தனிப்பிரிவு: அரசு மருத்துவமனையில் துவக்கம்
Added : மே 27, 2022 | |
Advertisement
 

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இப்பிரிவை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சாலையில் தஞ்சம் அடைபவர்கள் உள்ளிட்டோர் காவல்துறை உதவியுடன் மீட்கப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.இங்கு அனுமதிக்கப்படும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையுடன், உடற்பயிற்சி, பொழுதுபோக்கு விளையாட்டுகளான கேரம், பந்து ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்நோயிலிருந்து மீண்டு குணமானவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தோட்டக் கலை பராமரிப்பு, மாத்திரை போடும் உரை தயாரிப்பு போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தப் படுகின்றனர்.மனநல பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விபரம் மற்றும் விலாசத்தை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப் படுகின்றனர்.

இப்பணிகளில் மனநல மருத்துவர்கள், செவிலியர்கள், சமூக பணியாளர்கள், ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.இந்த சிறப்பு பிரிவினரை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது, பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் உள்ளவர்கள் குறித்த தகவல்களை 102 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தெரிவித்திடலாம்.
மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காவல்துறை உதவியுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் களுக்கான தனிப் பிரிவில் சேர்த்திடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆய்வின்போது, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர் அனுபாமா, கண் காணிப்பாளர் நேரு, கூடுதல் நிலைய மருத்துவர் பழமலை, பொற்செல்வி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு மற்றும் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும்-48 திட்டத்தின் பொறுப்பு மருத்துவர் கணேஷ் ராஜா, மனநல மருத்துவர் மணிகண்டன், மருத்துவக்கல்லுாரி பேராசிரியர் மாரிமுத்து மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள் நாகலட்சுமி, சரோஜாதேவி, சாந்தி, சம்பூர்ணம் உடனிருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X