திண்டுக்கல்,:''ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முதல் ஆயிரம் நாட்கள் மிக முக்கியமானது ''என, திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி தெரிவித்தார்.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட நோக்கம்குழந்தைகளின் மனம், உடல், சமூக ரீதியான முழுமையான வளர்ச்சிக்கு முறையான அடித்தளம் அமைத்தலே இதன் நோக்கம் .இதோடு , பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை, சுகாதார நிலையை மேம்படுத்துதல், சிசு இறப்பு விகிதம், நோயுறும் தன்மையின் விகிதம், ஊட்டச்சத்து குறைவு, முன் பருவ கல்வியில் இருந்து இடைநிற்றலை குறைத்தல்,குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம் தொடர்பான தேவைகளை அறிந்து செயல்படத்தக்க வகையில் தாய்மார்களின் திறனை மேம்படுத்துதலும் அடங்கும்.மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் எண்ணிக்கை, எத்தனை குழந்தைகள் படிக்கின்றனர்2,035 அங்கன்வாடி மையங்கள் உள்ள நிலையில் 39,644 குழந்தைகள் படிக்கின்றனர்.குழந்தைகளுக்கு என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறதுஆடிப்பாடி விளையாடு எனும் புத்தகம் மூலம் குழந்தைகள் மனம், உடல், சமுதாய வளர்ச்சி அடைவதற்கும் அவர்களின் ஐம்புலன்களின் செயல்பாடுகளான பார்த்தல், கேட்டல், தொடுதல், சுவைத்தல், நுகர்தல் போன்ற நிகழ்வுகளை பற்றிய விளக்கங்கள் வண்ண படங்கள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. நன்னெறி கதைகள், கருத்துகள் நிறைந்த பாட்டுகள் குழந்தைகள் மைய பணியாளர்கள் மூலம் கற்றுத்தரப்படுகிறது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாடங்கள் சம்பந்தமான பதிவுகள் அனுப்பப்பட்டு, வீட்டிலும் கல்வி கற்றல் பணி நடத்தப்பட்டு வருகிறது.குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவுஇணை உணவாக தினமும் 125 கிராம் சத்துமாவு 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கும், 2-3 வயது குழந்தைகளுக்கு தினமும் 100 கிராம் சத்துமாவு, 3--5 வயது குழந்தைகளுக்கு தினமும் 10 கிராம் சத்துமாவு வழங்கப்படுகிறது. தற்போது குழந்தைகள் மையத்தில் பயிலும் 2--5 வயது குழந்தைகளுக்கு சத்துமாவு கொழுக்கட்டை, கஞ்சி, உருண்டையாக வழங்கப்படுகிறது.சமுதாய வளைகாப்பு நடைபெறுகிறதா. எத்தனை பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.கர்ப்பிணிகளுக்கு ஆண்டுதோறும் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.2021ல் 3,100 பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. நடப்பாண்டிலும் 3,100 பேருக்கு நடத்தப்பட உள்ளது.கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கான திட்டங்கள்கர்ப்பம் தறித்தவுடன் முதல் 3 மாதங்களுக்குள் குழந்தைகள் மையத்தில் தங்களின் கர்ப்பத்தினை பதிவு செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள் மையத்தில் பதிந்த கர்ப்பிணிகளுக்கு தினமும் 165 கிராம் என ஒரு மாதத்தில் 25 நாட்களுக்கும், கர்ப்பத்தை பதிவு செய்த நாள் முதல் குழந்தை பிறந்து 6 மாதம் வரை இணை உணவு வழங்கப்படுகிறது.கர்ப்பிணிகளை குழந்தைகள் மைய பணியாளர்களால் வீடுகள் பார்வையிடுதல் மூலம் தடுப்பூசி, மாதாந்திர மருத்துவ பரிசோதனை, ஊட்டச்சத்து நிறைந்த உணவு பழக்க வழக்கங்கள், எடை அதிகரித்தல் ஆகியவற்றை உறுதி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சமுதாயம் சார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், அவர்களின் குடும்பதாருக்கு கர்ப்பிணியின் கர்ப்பகால பராமரிப்பு, பிரசவத்திற்கு தயாராகுதல், குழந்தைகளின் வளர்ச்சிப்படி நிலைகள், எந்த மாதத்தில் குழந்தைகளுக்கு இணை உணவு தொடங்குவது குறித்து கல்வி, ஆலோசனை வழங்கப்படுகிறது.போஷான் அபியான் திட்டத்தில் எத்தனை இடங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளதுமாவட்டம் முழுவதும் 15 வட்டாரத்தில் உள்ள 827 அங்கன்வாடி மையத்தில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.ஆயிரம் நாட்களின் முக்கியத்துவம்ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சி மட்டுமின்றி அறிவு, மூளை வளர்ச்சியும் சேர்ந்தது ஆகும். இந்த வளர்ச்சி குழந்தை கருவாக உருவான நாளில் இருந்து ஆரம்பமாகிறது. இந்த நாட்கள் ஒரு குழந்தையின் வாழ்நாள் முழுமைக்குமான ஆரோக்கியம், அறிவு வளர்சசிக்கு அடிப்படையான காலகட்டம் என்பதால், இதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இந்த நாட்களில் தாயும், தந்தையும் தன் குழந்தைக்கு என்ன விதமான கவனிப்பு கொடுக்கிறார்களோ அதுவே அந்த குழந்தையின் ஆரோக்கியமான பிற்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்,என்றார்.