பழநி, /lதிண்டுக்கல் மாவட்டத்தில் ஓட்டல்களில் விலைப் பட்டியல் முறையாக இல்லாமல் குழப்பமடையும் மக்கள் , அதிக விலை கொடுத்தும் தரமும் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் . இதை சரி செய்ய உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை அசியமாகிறது. மாவட்டத்தில் கொடைக்கானல் , பழநி முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு வெளிமாவட்ட ,மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.இதுபோல் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வர்த்தகம் சம்பந்தமாக வருகை தருகின்றனர். இவர்கள் ஓட்டல்களை நாடினால் பல ஓட்டல்களில் முறையான விலைப்பட்டியல் இருப்பதில்லை. இருக்கும் ஓட்டல்களில் முறையான விலைகளை குறிப்பிடுவதில்லை. விலை குறிப்பிடாத பொருட்கள் விலையை தெரிந்துகொள்ள இயலாமல் ,வாங்க வேண்டிய சூழல் உள்ளது. வாங்கிய உணவு பொருட்களுக்கும் பில் வழங்கபடுவதில்லை. பார்சல் வாங்கும் போது உணவு கூடுதலாக விலை வசூலிக்கப்படுகிறது. அதற்கான பில்லிலும் மொத்த ரூபாயே குறிப்பிடப்படுகிறது. இதனால் வெளியூர், வெளிமாநிலத்திலிருந்து வரும் மக்கள் குழப்பமடைகின்றனர். ஒரு சில ஓட்டல்களில் கொடுக்கும் பணத்திற்கு தகுந்த தரம் இருப்பதில்லை. குடும்பத்துடன் வருபவர்கள் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியும் தரம் இல்லாததால் மன உளைச்சல் அடைகின்றனர். இது தொடர்பாக கேள்விகேட்டால் பணியாளர்களுடன் வாக்குவாதம்தன் ஏற்படுகிறது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எதையும் கண்டுக்கொள்வதில்லை .இனியாவது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தவறு செய்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிப்பதற்கான இலவச தொலைபேசி எண்ணை அனைவரும் தெரியும் படி ஓட்டல்களில் வைக்க வேண்டும்.........தேவை தரம் குறித்த சோதனை பலஓட்டல்களில் விலைப்பட்டியல் இல்லை. தரமற்ற குடிநீர், தடைசெய்யப்பட்ட வேதிபொருட்கள், வண்ணங்கள் , ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், 'கப்'கள் உபயோகிக்கின்றனர். சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள், எண்ணை, தண்ணீரின் தரம் குறித்தும் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும்." என்றார். மணிவண்ணன், மருந்து விற்பனையாளர்,திண்டுக்கல்................