திட்டக்குடி:திட்டக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வி.சி., நகரசெயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார். வி.சி., நிர்வாகிகள் குணத்தொகையன், ஜான்செங்குட்டுவன், இந்திய கம்யூ., சின்னதுரை, நிதிஉலகநாதன், சுப்பிரமணியன், முருகையன், மா.கம்யூ., அன்பழகன், ராஜேந்திரன், மகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடையில் வழங்க வேண்டும். அரசுத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.