சிதம்பரம்:சிதம்பரத்தில் மகிளா காங்., சார்பில் நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான் உருவபொம்மை எரித்து போராட்டம் நடந்தது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்து அவதுாறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து காங்., சார்பில், சிதம்பரத்தில் போராட்டம் நடந்தது. அப்போது, சீமான் உருவ பொம்மை எரித்தனர்.அப்போது, சீமானுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். மகிளா காங்., மாவட்ட பொதுச்செயலாளர் அஞ்சம்மாள் தலைமை தாங்கினார். நகர தலைவி கவிதா, மாவட்ட செயலாளர் பாத்திமா, முன்னாள் செயலாளர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். மகிளா காங்., உறுப்பினர்கள் கலா, வாணி, சித்ரா, வசந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.