வீட்டுக்கு இரவில் வந்த தீர்மானங்கள்!
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி, இரவு நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மொத்தம் 61 தீர்மானங்கள் விவாதத்துக்கு வைக்கப்பட்டன. 13 தீர்மானங்கள், கவுன்சிலர்கள் வீட்டுக்கு இரு நாட்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. 48 தீர்மானங்கள் நேற்று முன்தினம் இரவு, மாநகராட்சி அலுவலக உதவியாளர்கள், கவுன்சிலர்கள் வீட்டுக்குச் சென்று வழங்கி விட்டனர். சிலரது வீட்டுக்கு இரவு, 10:00 மணிக்குச் சென்று வழங்கியிருக்கின்றனர்.

இச்சூழலில், மன்றம் துவங்கியதும், மேஜை தீர்மானமாக, மூன்று பொருட்கள் வைக்கப்பட்டன. இதைப்பார்த்து கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கூட்டம் துவங்கியதும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ், காங்., கவுன்சிலர் அழகு ஜெயபாலன், தி.மு.க., கவுன்சிலர் ஜெயபிரதா தேவி, மா.கம்யூ., ராமமூர்த்தி, இ.கம்யூ., சாந்தி உள்ளிட்டோர் பேசினர்.

அதன்பின், வார்டு பிரச்னைகளை பற்றி, கவுன்சிலர்கள் பலரும் பேசியதும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்ற கூட்டம் முடியும் தருவாயில், மேயர் முன்அனுமதியுடன் மேலும், 19 தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்படுவதாக, கமிஷனர் (பொ) ஷர்மிளா தெரிவித்தார். அலுவலக ஊழியர்கள், கவுன்சிலர்களின் இருக்கைக்குச் சென்று, தீர்மான நகல்களை வழங்கினர்.

தீர்மானங்களை படித்து பார்க்காமலேயே, 18 தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக, மேயர் அறிவித்தார். மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட, 85 தீர்மானங்களில், 3 மட்டும் நிராகரிக்கப்பட்டன, ஒரு தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டது; ஒரு தீர்மானத்தில் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டது.


 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X