கூடுதல் செவிலியர்நியமிக்க கோரிக்கை | கடலூர் செய்திகள் | Dinamalar
கூடுதல் செவிலியர்நியமிக்க கோரிக்கை
Added : மே 27, 2022 | |
Advertisement
 

மந்தாரக்குப்பம்:கெங்கைகொண்டான் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் செவிலியர்கள் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கெங்கைகொண்டான், மேல்பதி, கீழ்பாதி, வடக்குவெள்ளுர், பழையநெய்வேலி, சேப்ளாநத்தம், குறவன்குப்பம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலனை கருதி, கெங்கைகொண்டான் எஸ்.பி.டி.எஸ்., நகரில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டது. இங்கு தினசரி 250 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு பணியில் ஓரு செவிலியர் மட்டுமே உள்ளார். இதனால் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் சிகிச்சை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே நோயாளிகள் நலன் கருதி கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் செவிலியர்கள் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X