டி.என்.சி.ஏ., - டிவிஷன் கிரிக்கெட் லீக்; சிங்கம் புலி, திருவல்லிக்கேணி அபாரம்
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை : சென்னையில் நடந்து வரும், டி.என்.சி.ஏ., - டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், 84 ரன்கள் வித்தியாசத்தில் நுங்கம்பாக்கம் அணியை, திருவல்லிக்கேணி அணி தோற்கடித்தது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிசன் கிரிக்கெட் 'லீக்' போட்டிகள் சென்னையில் நடக்கின்றன. இப்போட்டியில், பல்வேறு கிரிக்கெட் கிளப் அணிகள் பங்கேற்று, லீக் முறையில் மோதி வருகின்றன.

சமீபத்தில் நடந்த மூன்றாவது டிவிஷனில், திருவல்லிக்கேணி கிரிக்கெட் கிளப் அணி, 50 ஓவர்களில், 8 விக்கெட் இழந்து, 241 ரன்கள் குவித்தது. அணியின் வீரர் கவுரி சங்கர் 137 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் உட்பட 100 ரன்களை எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய, நுங்கம்பாக்கம் அணி, 43.3 ஓவர்களில், அனைத்து விக்கெட் இழந்து, 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 84 ரன்கள் வித்தியாசத்தில் திருவல்லிக்கேணி அணி வெற்றி பெற்றது.

நான்காவது டிவிஷனில், டைகர் கிரிக்கெட் கிளப் அணி, 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து, 193 ரன்களை எடுத்தது. அடுத்து பேட் செய்த எஸ்.பி.ஐ., வங்கி கிளப் அணி, அபாரமாக விளையாடி 24.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐந்தாவது டிவிஷனில், ஏர் இந்தியா ஸ்போர்ட்ஸ் கிளப், 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 210 ரன்களை எடுத்தது. நேஷனல் கிரிக்கெட் கிளப் அணி, 35.1 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சங்கம் அணி, 37.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய, யூனிகார்ன் கிரிக்கெட் கிளப் அணி, 19.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து, 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன.சிங்கம் புலி கிரிக்கெட் கிளப் அணி, 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து, 352 ரன்களை குவித்தது.

அணியின் வீரர் சிபி, 114 பந்துகளில், 13 பவுண்டரி, ஒரு சிக்சர் என, மொத்தம் 132 ரன்களும், மற்றொரு வீரர் மதன்குமார் 71 பந்துகளில் 13 பவுண்டரி, ஐந்து சிக்சர்கள் என, 116 ரன்களும் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். அடுத்து ஆடிய மில் தடகள சங்கம் அணி, 34 ஓவர்களில் 199 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் சிங்கம் புலி அணி, 153 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X