கிள்ளை:கிள்ளை போலீஸ் நிலையத்தில், பயன்படுத்தப்படாமல் இருந்த கிணற்றை, கிள்ளை பேரூராட்சி நிர்வாகத்தினர் துார்வாரி சீரமைப்பு பணி செய்து, மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
கிள்ளை போலீஸ் நிலைய வளாகத்தில், பழமையான கிணறு ஒன்று இருந்தது. கிணற்று நீரை போலீசார், குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தி வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, கிணற்றின் சுற்றுப்புற பகுதி சேதமடைந்ததால், போலீசார், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து, கிள்ளை போலீசார், பாழடைந்த கிணற்றை சீரமைத்துத்துத் தர பேரூராட்சி நிர்வாகத்திற்கு, கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில், கிள்ளை சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன் உத்தரவின் பேரில், பாழடைந்த கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்து, துார்வாரப்பட்டது.மேலும், மோட்டார் வசதி, கிணற்றை சுற்றி விரிசல் பகுதிகள் சீரமைக்கப்பட்டது. இந்த பணியை, கிள்ளை சப் இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், ராம்குமார் மற்றும் போலீசார் பார்வையிட்டனர்.