கால்நடை மருத்துவமனை தேவை: சட்டசபை மதிப்பீட்டு குழுவிடம் கோரிக்கை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கால்நடை மருத்துவமனை தேவை: சட்டசபை மதிப்பீட்டு குழுவிடம் கோரிக்கை
Added : மே 27, 2022 | |
Advertisement
 

சூலூர்:அப்பநாயக்கன்பட்டியில் கால்நடை மருத்துவமனை அமைத்து தருமாறு சட்டசபை மதிப்பீட்டு குழுவினரிடம் மனு அளிக்கப்பட்டது.
அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் சாந்தி உள்ளிட்டோர், சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர் ராஜாவிடம் அளித்த மனு:சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் ஆடு, மாடுகள் வளர்ப்பதையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.

இங்கு, ஒரு லட்சம் ஆடுகள் உள்ள நிலையில், கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டால், சிகிச்சைக்காக, 10 கி.மீ., தொலைவில் உள்ள பாப்பம்பட்டிக்கு செல்ல வேண்டும். இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எங்கள் ஊரிலேயே கால்நடை மருத்துவமனை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. பழைய ஊராட்சி அலுவலகத்தையே கால்நடை மருத்துவமனையாக்கும் வசதி உள்ளது.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X