விளாங்குறிச்சி:விளாங்குறிச்சி ரோட்டிலுள்ள குமுதம் நகர் பகுதியில், புதியதாக அமைய உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குமுதம் நகர் நலக்குழு அமைப்பின் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், 'விளாங்குறிச்சி சாலை, குமுதம் நகர், பால்கார தோட்டம் அருகில் புதிய டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அப்பகுதியில் வங்கிகள், உணவு கடைகள், சிறு, குறு நிறுவனங்கள், பஸ் ஸ்டாண்ட் போன்றவை உள்ளன. இதனால் இப் பகுதியில் மதுக்கடை அமைந்தால் பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, பெரும் இடையூறு ஏற்படும். இதனால் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் மதுக்கடையை அவ்விடத்தில் திறக்க அனுமதிக்க வேண்டாம்' என கூறப்பட்டுள்ளது.