மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று துவங்கிய ஜமாபந்தியில், 67 பேர் கோரிக்கை மனு அளித்தனர்.
மேட்டுப்பாளையத்தில் தாசில்தார் அலுவலகத்தில், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் ஜமாபந்தி நேற்று துவங்கியது. கெம்மாரம்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், 67 மனுக்களை கொடுத்தனர். இதில், வீட்டுமனை பட்டா கேட்டு, 36, பட்டா மாறுதல் கோரி, 18, பல்வேறு கோரிக்கைகளுக்கு, 13 மனுக்களும் இடம்பெற்றன. இன்று மருதுார், காரமடை, பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு ஜமாபந்தி நடக்கிறது.