விருத்தாசலம்:விருத்தாசலம் அடுத்த மருங்கூரில் வேளாண்மை மற்றும் உவழர் நலத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட நிகழ்ச்சி நடந்தது.
இதில், துணை வேளாண் அலுவலர் வில்வேந்தன், உதவி வேளாண் அலுவலர் கதிரவன், உதவி தோட்டக்கலை அலுவலர் அருள், மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், மருங்கூர், ஸ்ரீ புத்துார், ஸ்ரீ நெடுஞ்சேரி, கொழை, ராமாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, தென்னை, உளுந்து, மருந்து தெளிப்பான் உள்ளிட்ட வேளாண் இடு பொருட்கள் வழங்கப்பட்டது.