ஸ்ரீமுஷ்ணம்:தே.பவழங்குடியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், தே.பவழங்குடியில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., சிதம்பரம் ஆர்.டி.ஓ., ரவி ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
ஒன்றிய சேர்மன் லதா ஜெகஜீவன்ராம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் ராஜவன்னியன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மண்டல துணை வட்டாட்சியர் சசிகுமார், ஆர்.ஐ.சாரதா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். முகாமில் 108 மனுக்கள் பெறப்பட்டு 57 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.