பந்தலுார்:பந்தலுார் அருகே, நெலக்கோட்டை ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் டெர்மிளா தலைமையில் நடந்தது.
அதில், பலர் வார்டு உறுப்பினர்கள்,'இதுவரை நடந்த கூட்டத்தின், வரவு செலவு கணக்கு விவரத்தை, தனித்தனியாக தர வேண்டும்; வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் தலைவர் தன்னிச்சையாக பணி மேற்கொள்வதை நிறுத்த வேண்டும்; தலைவருக்கு போன் செய்தால், அவரின் கணவர் பதில் அளிக்கிறார்,' என, தெரிவித்தனர்.
அப்போது பேசிய தலைவர்,'நான் வெளியில் செல்லும் போது, எனது கணவர் தான் பாதுகாப்புக்கு வருகிறார். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இதுபோன்ற தொல்லைகள் கொடுக்கப்படுகிறது,' என்றார்.
தொடர்ந்து, கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், தலைவர் திடீரென கூட்டத்தை விட்டு வெளியேறினார். அங்கு வந்த தலைவரின் கணவர் பன்னீர் செல்வம்,''இந்த பிரச்னை தொடர்பாக, போலீஸ் அதிகாரி; ஆர்.டி.ஓ.,விடம் புகார் கொடுக்க உள்ளோம்,'' என, கூறிசென்றார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.