குன்னுார்: குன்னுார் காட்டேரி பூங்காவில். 50 நாட்களில் 27 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள காட்டேரி பூங்காவில், கோடை சீசனுக்காக நடவு செய்த, 'மேரிகோல்டு, பிளாக்ஸ், காஸ்மோஸ், ஆன்டிரினம், பெகோனியா, டயான்தஸ், பால்சம்' உள்ளிட்ட பல்வேறு வகை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இங்கு கடந்த, 50 நாட்களில், 27 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
சுற்றுால பயணிகள் கூறுகையில், 'ஊட்டியில் மலர் கண்காட்சி, குன்னுாரில் பழ கண்காட்சி போன்று, காட்டேரி பூங்காவிலும் கண்காட்சிக்கு தோட்டக்கலை துறையினர் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்,' என்றனர்.