பெண்களிடம் கத்தியை காட்டி 25 சவரன் நகை கொள்ளை:பட்டப்பகலில் மர்ம நபர்கள் அட்டகாசம்
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே வீடு புகுந்து பட்டப்பகலில் பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 25 சவரன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த வெள்ளையூர் முகமதியர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம், 67; இவர், நேற்று மதியம் 1:00 மணியளவில் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்றார்.வீட்டில், அப்துல் ரஹீம் மனைவி பல்கீஸ்பேபி, 63; மருமகள் உஸ்மான் மனைவி ஷேக்கா, 19; மட்டும் இருந்தனர்.
அப்போது முகத்தில் மாஸ்க், கைகளில் கிளவுஸ் அணிந்த 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, பல்கீஸ்பேபி, ஷேக்கா ஆகியோரிடம், சத்தம் போட்டோல் கொலை செய்து விடுவோம் என கத்தியைக் காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி வாங்கிக் கொண்டனர். பின்னர் பீரோவில் இருந்தது என மொத்தம் 25 சவரன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு இருவரையும் பாத்ரூமில் தள்ளி கதவை மூடி வெளி கதவை மூடிவிட்டு தப்பியோடினர்.

பாத்ரூமில் அடைக்கப்பட்ட இருவரும் கூச்சலிட்டதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்து இருவரையும் மீட்டனர். உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகையை அபகரித்துச் சென்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X