'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை முடிக்க மூன்றே மாதம்: மாநகராட்சி நிர்வாகம் திட்டம்
Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: குளங்களில் நடந்து வரும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர,மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கென, பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க, 'கான்ட்ராக்டர்'களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து, ரூ.490 கோடியும், மாநில அரசிடம், ரூ.500 கோடியும் என, ரூ.990 கோடி பெறப்பட்டுள்ளது.இதில், 978.73 கோடிக்கு, 56 பணிகள் திட்டமிடப்பட்டு தற்போது, 32 பணிகள், ரூ.241.05 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.



latest tamil news



தற்போது நடந்து வரும், 14 பணிகளுக்கு, ரூ.478.17 கோடி செலவிடப்பட்டுள்ளது. தவிர, ரூ.16.47 கோடி மதிப்பீட்டில், 10 புதிய பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், மாநகராட்சி வசம் இருக்கும் குளக்கரைகள் டைல்ஸ் பதித்தல், சைக்கிளிங் தளம் என பல்வேறு அம்சங்களுடன், அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
பாதாள சாக்கடை, பயோமைனிங் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகின்றன. சமீபத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார் தலைமையில், ஒரு நபர் கமிஷன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறியதாவது:
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை பொறுத்தவரை, கடந்த ஒரு ஆண்டில் மட்டும், ரூ.120 கோடி செலவு செய்துள்ளோம். குளக்கரைகளில் கான்கிரீட் போடக்கூடாது என்ற கருத்து வந்ததையடுத்து, சில மாறுதல்களும் செய்துள்ளோம். வாலாங்குளத்தின் வட பகுதியில், 100 பேரும், பெரியகுளத்தில், 60 பேரும் வேலை செய்கின்றனர்.

கான்ட்ராக்டரிடம் வேலை ஆட்களை அதிகரித்து பணிகளை வேகப்படுத்த சொல்லியிருக்கிறோம். செல்வசிந்தாமணி குளத்தில் கிட்டத்தட்ட பணிகள் முடிந்துவிட்டன.மற்ற குளங்களையும் மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதரசில பணிகளுக்கு மார்ச், 31ம் தேதிதான் பணி ஆர்டர் கொடுத்துள்ளோம். அதில், போட்டிங், மூவி ஆன் வாட்டர், எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் உள்ளிட்ட பணிகள் அடங்கும். இப்பணிகள் அடுத்தாண்டுக்குள் முடிந்துவிடும்.
இவ்வாறு, அவர் கூறினார்.






எந்த குளத்தில் எவ்வளவு பணி?



பெரியகுளத்தில் (திட்ட மதிப்பீடு, ரூ.62.17 கோடி), 60 சதவீத பணிகளும் (செலவினம், ரூ.34.45 கோடி), செல்வசிந்தாமணி குளம் (31.47 கோடி), 99 சதவீதம் (29.18 கோடி), வாலாங்குளம் (67.86 கோடி), 53 சதவீதம் (33.625 கோடி) பணிகள் முடிந்துள்ளன. செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளம் (31.25 கோடி), 71 சதவீதம் (20.48 கோடி), கிருஷ்ணம்பதியில் (19.36 கோடி), 77 சதவீதம் (13.68 கோடி), குறிச்சி குளத்தில் (52.16 கோடி), 56 சதவீதம் (21.97 கோடி) என புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிந்துள்ளன.

பெரியகுளத்தில் (திட்ட மதிப்பீடு, ரூ.62.17 கோடி), 60 சதவீத பணிகளும் (செலவினம், ரூ.34.45 கோடி), செல்வசிந்தாமணி குளம் (31.47 கோடி), 99 சதவீதம் (29.18 கோடி), வாலாங்குளம் (67.86 கோடி), 53 சதவீதம் (33.625 கோடி) பணிகள் முடிந்துள்ளன. செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளம் (31.25 கோடி), 71 சதவீதம் (20.48 கோடி), கிருஷ்ணம்பதியில் (19.36 கோடி), 77 சதவீதம் (13.68 கோடி), குறிச்சி குளத்தில் (52.16 கோடி), 56 சதவீதம் (21.97 கோடி) என புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிந்துள்ளன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-202210:56:31 IST Report Abuse
Gopalakrishnan S கருணாநிதி ஆட்சியில் புதிய சட்டமன்ற வளாகம், கூரையில் சினிமாக்காரர்களை வைத்து செட் போட்டு திறப்பு விழா நடத்தியதாக ஞாபகம்... அந்த விழாவில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி சினிமாக்காரர்களுடன் ஆனந்த தாண்டவம் ஆடியதாகவும் ஞாபகம்... கருணாநிதியின் தவப்புதல்வன் அவ்வாறு செய்யாதிருந்தால் சரி ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X