இளம்பெண்ணை கடத்தி கொலை வெறி தாக்குதல்:விருத்தாசலம் அருகே வாலிபர் கைது
Added : மே 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே திருமணம் நிச்சயித்த பெண்ணை கடத்தி, கொலைவெறி தாக்குதல் நடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி வெள்ளாற்றங்கரை பகுதியில் உள்ள முட்புதரில், நேற்று முன்தினம் பகல் 1:30 மணியளவில் பெண் ஒருவர் அலறல் சத்தம் கேட்டது.அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அந்த பெண்ணை இரும்பு சுத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு வாலிபர் ஒருவர் தப்பியோடினார்.

கருவேப்பிலங்குறிச்சி போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம் பெண்ணை மீட்டு, புதுச்சேரி ஜிப்மருக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
அதில், கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த அம்பலவாணன் மகன் ஸ்ரீதர், 25, என்பவர், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை கடத்தி வந்து இரும்பு சுத்தியால் தாக்கியது தெரிய வந்தது.ஸ்ரீதரை நேற்று கைது செய்த போலீசார், கொலைவெறி தாக்குதலுக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். தாக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு வரும் 10ம் தேதி திருமணம் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.


சாலை மறியல்

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர் குறிஞ்சிப்பாடி, பெத்தநாயக்கன்குப்பத்தில் நேற்று மாலை 6:20 மணிக்கு திரண்டனர். இளம்பெண்ணை 5க்கும் மேற்பட்டோர் கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றனர். இதற்கு பெண் மறுத்ததால் கொலை செய்ய முயன்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சாலை மறியலில் ஈடுபட்டனர்.நெய்வேலி டி.எஸ்.பி., ராஜேந்திரன் சமாதானம் செய்தார். இதனையேற்று 7:00 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர். மறியல் காரணமாக விருத்தாசலம்- கடலுார் சாலையில் 40 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
31-மே-202203:22:10 IST Report Abuse
NicoleThomson தமிழக பெண்களுக்கு சோதனை மேல் சோதனை என்றுதான் அவர்களுக்கு விடியுமோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X