பிரதமர் அலுவலகத்துக்கு குண்டு மிரட்டல் கடிதம்: சேலத்தில் ஓய்வு பேராசிரியரிடம் விசாரணை
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சேலம்: சேலத்தில் இருந்து டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியது தொடர்பாக ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் மத்திய புலனாய்வுத்துறை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.


சேலம் கன்னங்குறிச்சி தபால் அலுவலகத்தில் இருந்து தலைமை தபால் அலுவலகம் மூலம் டில்லியில் உள்ள பிரதமர் மோடி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் சென்றுள்ளது. நேற்று சென்னை விழாவில் பிரதமர் பங்கேற்ற நிலையில் இக்கடிதம் பிரதமர் அலுவலகத்தை அடைந்ததால் மத்திய உளவுத்துறை போலீசார் புலனாய்வு பிரிவு போலீசார் சேலம் மாநகர போலீசாரை உஷார்படுத்தினர். இதையடுத்து சேலத்தில் இருந்து ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியவர்களின் பட்டியல் தயாரானது. அதில் சேலம் ஏற்காடு சாலை ரோஜா கார்டனை சேர்ந்த பழனிசாமி 85, பெயர் இருந்தது.இவர் சேலம் கலை அறிவியல் கல்லுாரியில் ஆங்கில துறை பேராசிரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சகுந்தலா 80, முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர்களது மகன் மோகனவேல் 40. இவர் சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக பணியாற்றிய நிலையில் 2010ல் மரணமடைந்தார். இதில் மனமுடைந்த பழனிசாமி நீதிபதிகள் போலீஸ் உயரதிகாரிகள் அரசுத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்ததும் விசாரணையில் தெரிந்தது. 2014ல் சேலம் மாவட்ட நீதிபதிக்கும் மிரட்டல் விடுத்திருந்தார்.

மேலும் ஒரு வழக்கில் இவரது மருமகள் தீபாராணிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்ட வக்கீல் ஜெகதீசன் சம்பந்தி செல்வம் ஆகியோரை பழிதீர்க்க அவர்கள் பெயர்களிலும் பழனிசாமி மிரட்டல் கடிதங்களை எழுதியது தெரியவந்துள்ளது.
இதனால் பிரதமர் அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை பழனிசாமி எழுதியிருக்க கூடும் என்ற சந்தேகத்தில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் சேலம் வடக்கு சரக துணை கமிஷனர் மாடசாமி உள்ளிட்ட போலீசார் சேலத்தில் பழனிசாமியிடம் 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்வம் ஜெகதீசனிடமும் விசாரணை நடக்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X