தேனி - மதுரை பயணிகள் ரயில்: பிரதமர் மோடி துவக்கி வைப்பு | தேனி செய்திகள் | Dinamalar
தேனி - மதுரை பயணிகள் ரயில்: பிரதமர் மோடி துவக்கி வைப்பு
Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | |
Advertisement
 
Latest district News

தேனி: மதுரை - தேனி இடையே பயணிகள் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். 11 ஆண்டுக்களுக்கு பின் தேனி வந்த ரயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரை - போடி இடையிலான மீட்டர் கேஜ் பாதை 2011ல் அகற்றப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கியது. போதிய நிதி ஒதுக்கீடு இன்றி பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. பா.ஜ., ஆட்சிக்கு பின் ரூ.506 நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைபடுத்தப்பட்டது. இதில் 90.4 கி.மீ., பாதையில் தற்போது தேனி வரை 75 கி.மீ,. துார பணிகள் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து நேற்று இச் சேவையை பிரதமர் மோடி சென்னையில் இருந்து காணொலியில் துவக்கி வைத்தார். தேனி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த விழாவில் எம்.பி., ரவீந்திரநாத் பேசுகையில் ' மதுரை - போடி திட்டத்திற்கு 2018 வரை ரூ. 40 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. 2019க்கு பின் ரூ. 317 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பியுஸ் கோயல், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு தேனி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றோர் விபரம்: கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீன்உமேஷ்டோங்க்ரே, தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு முதன்மை பொறியாளர் இளம்பூரணன், இணைப் பொறியாளர் சூரியமூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் சரவணகுமார், மகாராஜன், நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, கே.எம்.சி., குழும தலைவர் முத்துகோவிந்தன், இணை இயக்குனர் ஷியாம், கட்டுனர் சங்க மாவட்ட தலைவர் முரளீதரன், முன்னாள் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ராஜன், பா.ஜ., இளைஞரணி தலைவர் அஜித்இளங்கோ, விளையாட்டு திறன்மேம்பாட்டு பிரிவு பாலாஜிதங்கவேல், பெரியகுளம் கவுன்சிலர் சண்முகசுந்தரம், கூடலுார் அ.தி.மு.க., நகர செயலாளர் அருண்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரீத்தா, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சையதுகான், துணைசெயலாளர் சற்குணம், நகரசெயலாளர்கள் கிருஷ்ணகுமார், ரங்கராஜன், ,ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், முத்துபாலாஜி, நிர்வாகிகள் அரண்மனைசுப்பு, தீபன்சக்கரவர்த்தி, திண்டுக்கல் - குமுளி ரயில்பாதை போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன், மதுரை - போடி, திண்டுக்கல் - லோயர்கேம்ப் ரயில்பாதை திட்ட அமலாக்க குழு தலைவர் லாசர், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் நடேசன், நிர்வாகிகள் சந்திரகுமார், ராமமூர்த்தி, வழக்கறிஞர் முத்துராமலிங்கம், சம்பத், பெருமாள், ஸ்ரீனிவாசன், விஜயகுமார், பாஸ்கரன், சங்கர்பாபு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X