வைகையில் மணல் குவாரி தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | மதுரை செய்திகள் | Dinamalar
வைகையில் மணல் குவாரி தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Added : மே 27, 2022 | |
Advertisement
 



மதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரிக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


மானாமதுரை அருகே மேலப்பசலை செல்வகண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
செய்களத்துார், மானாமதுரை வைகை ஆற்றில் குறிப்பிட்ட சர்வே எண்களில் மணல் குவாரிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும். விவசாயம், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும். குவாரிக்கு தடை விதிக்க வேண்டும். உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.
மானாமதுரை அருகே கல்குறிச்சி ஆற்றுப்படுகையில் மணல் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்யக்கோரி மாயழகு என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.தமிழக அரசுத் தரப்பு: தற்போது குவாரி இயங்கவில்லை. உரிமத்தை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தது.நீதிபதிகள் கனிமவளத்துறை இயக்குனர், சிவகங்கை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்கள் ஒத்திவைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X