சிவகங்கை : மத்திய அரசு பெட்ரோலிய பொருள் மீதான செஸ், சர்சார்ஜ் வரியை நீக்க வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசலில் இரு கம்யூ.,க்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் எம்.சந்திரன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் உலகநாதன், இந்திய கம்யூ,., நகர் செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.ராமதாஸ், ஒன்றிய செயலாளர் கார்த்தி தலைமை வகித்தனர்.இந்திய கம்யூ., மாநில நிர்வாக குழு குணசேகரன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் திருமொழி ஆகியோர் பேசினர்.காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை, திருப்புத்துார் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.