மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில், மூன்று நாட்களாக மொடக்குறிச்சி, அரச்சலுார், அவல்பூந்துறை உள்வட்டங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. இதில் மொடக்குறிச்சி உள்வட்டத்தில், 83 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 11 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 72 மனு நிலுவையில் வைக்கப்பட்டது. அரச்சலுார் உள்வட்டத்தில், 82 மனு பெறப்பட்டு, ஒன்பது ஏற்கப்பட்டு, 73 மனு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி நாளான நேற்று அவல்பூந்துறை உள்வட்டத்துக்கு நடந்தது.
இதில், 90 பேர் மனு தந்தனர். 10 மனுக்கள் ஏற்றுக்கொண்டு, 80 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், ரேசன் கார்டு, வீட்டுமனை பட்டா, மயான வசதி, ஆக்ரமிப்பு அகற்றுதல், குடிநீர் வசதி, நில அளவை உள்ளிட்டவை குறித்து மக்கள் மனு தந்தனர். மொத்தம், 255 மனு பெறப்பட்டு, 30 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
* அந்தியூர் தாலுகா அலுவலகத்தில், மூன்று நாட்களாக நடந்த ஜமாபந்தி முகாமில், 433 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதேபோல் பவானி தாலுகா அலுவலகத்தில், 435 மனு பெறப்பட்டு, 124 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.