பாதரை கிராம பஞ்., செயலாளரை கண்டித்து, வார்டு உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிபாளையம் அருகே பாதரை பஞ்., அலுவகம் முன், நேற்று மாலை, வார்டு உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து பஞ்., உறுப்பினர் ராஜ்குமார்
கூறியதாவது:
தலைவர், உறுப்பினர்கள் அனுமதி இல்லாமல், பஞ்., செயலாளர் வீட்டு வரிக்கு ரசீது போட்டுள்ளார். அதில் தேதியும் இல்லை. நாங்கள் கேட்டாலும் தெளிவான பதில் சொல்வதில்லை. இதனால் பஞ்., செயலாளர் நடவடிக்கைளை கண்டித்தும், அவரை உடனே மாற்ற வேண்டும் என வலியுத்தியும், துணைத்தலைவர் உள்பட ஆறு உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் நேரில் வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.