வட்டார இளைஞர் திறன் திருவிழா
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



நாமக்கல் வட்டாரத்தில் இளைஞர் திறன் திருவிழா, நாளை (மே 28ம் தேதி) நடக்கிறது.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்
வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தீனதயாள் உபத்யாய கிராமின் யோஜனா திட்டத்தின் கீழ், 18 வயது முதல், 45 வரையுள்ள ஆண், பெண் இருபாலருக்கும், பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரதமரின் கவுசல் விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களில், தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, டிரைவிங், உதவி செவிலியர், நான்கு சக்கர வாகனம் பழுது நீக்குதல், கணினி, சில்லறை விற்பனை வணிகம், துரித உணவு தயாரித்தல், மொபைல் போன் பழுது நீக்குதல் போன்ற திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்களில் பணியாற்ற ஏதுவாக இந்த பயிற்சிகளுக்கு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதையொட்டி நாளை (மே 28ம் தேதி), காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை, நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடக்கிறது. எனவே, முகாமில் நாமக்கல் வட்டாரத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும் பங்கேற்று, பொருத்தமான பயிற்சியை தேர்வு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X