நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், ஆண், பெண்களுக்கு, சி.சி.டி.வி., கேமரா, புகை அலாரம் பொருத்துதல் மற்றும் பெண்களுக்கான செயற்கை நகை தயாரித்தல் குறித்த, பயிற்சி இலவசமாக அளிக்கப்பட
உள்ளது.
இதுகுறித்து இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் பிருந்தா வெளியிட்ட அறிக்கை:
இந்த இலவச பயிற்சி முகாம், மே 30ம் தேதி துவங்கி, 13 வேலை நாட்களுக்கு நடைபெற உள்ளது. வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளோர் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு, 35 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க பட இருப்பதால், முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆர்வம் உள்ளவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை, இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ரவின்பிளாசா, திருச்சி சாலை, ரயில்வே மேம்பாலம் அருகில், நாமக்கல் என்ற முகவரியில், மே 30ம் தேதிக்குள் நேரில் வந்து, பூர்த்தி செய்து தரவேண்டும்.
விண்ணப்பதாரர் குறைந்த பட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 18 வயதுக்கு மேற்பட்டு, 45 வயதுக்குள் இருக்கவேண்டும், பயிற்சிக்கான செலவு, பயிற்சிகான சான்றிதழ், பயிற்சி பொருட்கள், தேனீர், சிற்றுண்டி, உணவு என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04286 -221004 என்ற தொலைபேசி எண்ணிலும், 96989 96424, 88259 08170 என்ற மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.