நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே என்.புதுப்பட்டியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
அங்கிருந்து லத்துவாடி மற்றும் பரளி செல்லும் சாலையில் உள்ள, ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் அப்பள்ளியின் வளாகத்தில், பழைய பாழடைந்த பள்ளி வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. அதில் மேற்கூறைகள் சிதிலமடைந்தும், கதவு, ஜன்னல்கள் இல்லாமலும் காணப்படுகிறது.
இதனால் இந்த கட்டடம், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாரியுள்ளது. மேலும், விஷஜந்துக்கள் வசிப்பிடமாகவும்
உள்ளது.
அதனால் கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்ததும் மாணவ, மாணவியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள், கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் கட்டடம் அகற்றப்படவில்லை. எனவே, பாழடைந்த கட்டடத்தை முற்றிலும் அகற்றிவிட்டு, அங்கு புதிய வகுப்றை கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.