'நிதி நெருக்கடியால் மீன்பிடி தடை நிவாரணத்தை உயர்த்த முடியலை'
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை:''தமிழக அரசின் நிதிநிலை சரியாக இல்லாததால், மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முடியவில்லை,'' என, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மீன்களின் இன விருத்தியை கருத்தில் வைத்து, வங்கக்கடல் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில், ஏப்., 14 முதல், 60 நாட்களுக்கு விசைப்படகுகள் வாயிலாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, 5,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது.
நிவாரண உதவிகளை வழங்கி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது: மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை, 5,000 ரூபாயில் இருந்து, 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்க கடும் முயற்சி எடுத்தோம்.கடந்த கால ஆட்சியாளர்களால், தமிழகத்தின் நிதி நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நிவாரணத் தொகையை உயர்த்தி தர முடியவில்லை. வரும் காலங்களில், நிதி நிலை சரியான பின், நிவாரணத் தொகையை உயர்த்தி தருவோம்.ஏற்கனவே முதல்வர் உறுதி அளித்தபடி, மீன் குறைவான காலத்தில் வழங்கப்படும் உதவி தொகையை, 5,000 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
மீனவர்கள் வட்டிக்கு பணம் வாங்கி தவிக்கக்கூடாது என்பதால், விவசாயிகள் எப்படி வங்கிகளில் விவசாய கடன் பெறுகின்றனரோ, அதேபோல மீனவர்களுக்கு வங்கி கடன் வழங்க தனி வங்கி அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், மீன்வளத்துறை இயக்குனர் பழனிச்சாமி, இணை இயக்குனர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதன்படி, தமிழகம் முழுதும் 1.90 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு, தலா 5,000 ரூபாய் வீதம், 95 கோடி ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட உள்ளது.


 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X