சம்பள தொகுப்பு முறையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை அமலாக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின, சி.ஐ.டி.யு., ஒருங்கிணைப்பாளர் முருகையா தெரிவித்தார்.
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 2019 செப்.,1ல் ஒப்பந்தப்படி புதிய ஊதியம் வழங்கி இருக்க வேண்டும். மூன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதுதான், போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளார்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு., ஒருங்கிணைப்பாளர் முருகையா கூறியதாவது:
போக்குவரத்து துறை அமைச்சருடன், 66 சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. மத்திய அரசு அறிவிக்கும், 'பே மேட்ரிக்' என்ற சம்பள தொகுப்பு முறையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்தை நிர்ணயம் செய்து அமலாக்க வேண்டும். அதிகாரிகள் குளறுபடி, இழுத்தடிப்பால், தொழிலாளர் ஊதிய உயர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர். அரசும், அதிகாரிகள் பேச்சை நம்புகிறது. ஓய்வூதியர்களுக்கு, 76 மாத டி.ஏ., வழங்க வேண்டும். ஓய்வு நாளில், அவர்களுக்கான அனைத்து பண பலன்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு கூறினார்.