போலீஸ் செய்திகள்....
Added : மே 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கஞ்சா விற்ற நால்வர் கைது

தேனி: ஆண்டிபட்டி டி.ராஜகோபாலன்பட்டி காலனி அஜித்குமார் 21. தனது டூவீலரில் 150 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தார். ஆண்டிபட்டி போலீசார் அவரை ைது செய்து, டூவீலர், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போடி அணைக்கரைப்பட்டி கீழத்தெரு அஜீத்பாண்டியன் 22. இவர் போடி மீனாட்சிபுரம் விலக்கு பஸ் நிறுத்தம் அருகே ரூ.5500 மதிப்புள்ள ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கினார். போடி தாலுகா போலீசார் கைது செய்தனர். சின்னமனுார் சொக்கநாதபுரம் குமரேசன் 37, சீலையம்பட்டி அப்துல்லா 62, பாலிதீன் பையில் 2 கிலோ 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தனர். இருவரும் கேரளாவில் குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கிவந்து, அதிக விலைக்கு விற்றுவருவதாக தெரிவித்தனர். இருவரையும் கைது செய்தனர்.
திருடியதாக புகார் ஐவர் மீது வழக்கு
தேனி: பெரியகுளம் மேலகாமாக்காபட்டி மேற்குத்தெரு மேனகா 29. இவர் தேனியில் ஜவுளிக்கடை பட்டுப் பிரிவில் அழகு சாதனப் பொருட்கள், தையல் கடை நடத்தி வந்தார். நிர்வாகத்திடம் ஏற்பட்ட பிரச்னையில் கடையில் இருந்த பணம் ரூ.15 லட்சம், டெய்லரிங் அறையில் இருந்த காஸ்மெட்டிக் பொருட்கள் மதிப்பு ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், பணத்தை ஜவுளிக் கடையில் பணிபுரிந்த சுரேஷ், பாலசுப்பிரமணி, ரஞ்சினி, மாரியப்பன், மோகன் உட்பட ஐந்து பேர் திருடியதாகபுகார் செய்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
தேனி: அல்லிநகரம் அண்ணாநகர் தெற்குத்தெரு பரிமளா 28. கணவர் மகேஸ்வரன் குடும்பத்துடன் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு சென்றுள்ளனர். மீண்டும் ஒன்றரை மணி நேரம் கழித்து வீடு திரும்பினர்.அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 14 கிராம் தங்கநகைகள், ரூ.18,500 பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X