கோயம்பேடு, :துாங்குவதற்கு இடம் பிடிக்கும் தகராறில், வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.கோவை, மதுக்கரையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 23. சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 23. இவர்கள் இருவரும் சென்னை, கோயம்பேடு பேருந்து பணிமனையில், பேருந்துகளை சுத்தம் செய்யும் பணியில், ஒப்பந்த முறையில் வேலை பார்த்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு இருவரும் சென்ற போது, வினோத்குமார் துணி போட்டு, துாங்க இடம் பிடித்ததாக தெரிகிறது.அந்த இடத்தில், சதீஷ்குமார் படுத்துள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரின் தலையில் வெட்டி விட்டு தப்பினார்.அங்கிருந்தோர் சதீஷ்குமாரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்கு பதிந்து, தப்பிச் சென்ற வினோத்குமாரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.