சேவையை தடுக்கும் ஊழியர்கள்: அரசு மருத்துவமனையில் அவலம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
சேவையை தடுக்கும் ஊழியர்கள்: அரசு மருத்துவமனையில் அவலம்
Added : மே 28, 2022 | |
Advertisement
 

உடுமலை:உடுமலை அரசு மருத்துவமனையில், தாமாகச்சென்று ரத்தம் தானம் செய்வோரை மருத்துவமனை ஊழியர்கள் திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், அவசர சிகிச்சையில் உள்ளோர் காக்க வேண்டும் என்பதற்காக, ரத்த தானம் செய்வோரை அரசு ஊக்குவித்து வருகிறது.கர்ப்பிணிகள், விபத்துக்களில் சிக்குவோர் என, அவசர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு பல நேரங்களில் ரத்தம் கிடைக்காமல், அவரவரின் உறவினர்கள் பதறுவதை அரசு மருத்துவமனைகளில் பார்க்க முடிகிறது.


இதனால், பலர், ரத்த தானம் செய்வதை தங்கள் வாழ்க்கையில் பெரும் பாக்கியமாக கருதி சேவை அடிப்படையில், அரசு ரத்த வங்கிகளில் ரத்ததானம் செய்கின்றனர். அதன் அடிப்படையில், உடுமலை அரசு மருத்துவமனையில் ரத்தவங்கி செயல்பட்டு வருகிறது.இங்கு, டாக்டர், செவிலியர், டெக்னீசியன் என, மூன்று பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மூன்று 'ஷிப்ட்' முறையில் ரத்த வங்கி பயிற்சியாளர்களுடன், 24 மணி நேரம் செயல்படுகிறது. ஆனால், தாமாகச்சென்று ரத்தம் தானம் செய்வோரை, அங்குள்ள பணியாளர்கள் முறையாக வரவேற்பதில்லை.அலட்சியப்படுத்தியும், பல மணி நேரம் காக்க வைத்தும், இறுதியில் குறிப்பிட்ட பிரிவு ரத்தம் தேவையில்லை, தற்போது ரத்தம் எடுக்க இயலாது, பணியாளர்கள் முகாம் சென்று விட்டனர் என பல காரணங்களைக் கூறி ரத்தம் பெறாமல் திருப்பி அனுப்புகின்றனர்.இவர்களின் இந்த செயல், மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.பாதிக்கப்பட்ட நபர்கள் கூறியதாவது:சேவை மனதோடு ரத்ததானம் செய்ய சென்றால், அங்குள்ள ஊழியர்கள் உரிய பதில் அளிப்பதில்லை.
சமீபத்தில், ரத்தம் தேவையான நிலையில், ரத்ததானம் செய்வோருடன் மருத்துவமனை வந்த கர்ப்பிணிகள், திருப்பி அனுப்பப்பட்டனர்.இதனால், சேவை மனதோடு ரத்தம் தானம் செய்வோரும் அவர்களின் செயலை விரும்பாமல் அங்கிருந்து புறப்பட்டுச்செல்கின்றனர். எனவே, ரத்தம் தேவையென வருவோரையும், ரத்ததானம் செய்வோரையும் முறையாக வரவேற்று அவர்களது முகவரி, மொபைல் போன் எண்ணை பெற்று, தகவல் தெரிவிக்க வேண்டும்.அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்களின் போக்கு, தனியார் ரத்த வங்கிகளை ஊக்குவிப்பது போல் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X