உடுமலை:கோவை குமரகுரு கல்லுாரியில், 'மகாலிங்கம் டிராபி' என்ற பெயரில், கல்லுாரிகள் இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள், மாநில அளவில் நடத்தப்பட்டன.அதில், த்ரோபால் போட்டியில், 9 அணிகள் பங்கேற்றன. அதில், உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரி அணியும் ஒன்று.அவ்வகையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய விசாலாட்சி அணி, குமரகுரு கல்லுாரி அணியுடன் மோதலை சந்தித்தது. அதில், நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, முதலிடம் பிடித்து, கோப்பையை தட்டிச்சென்றது.வெற்றி பெற்றவர்களை கல்லுாரிச்செயலாளர் சுமதி, முதல்வர் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் சுஜாதா உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.