ரயில் படிக்கட்டில் பயணித்தோரிடம் ரூ.13.67 லட்சம் அபராதம் வசூல்
Added : மே 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை,-பாதுகாப்பு விதியை மீறி, ரயில் படிகளில் தொங்கியபடி பயணித்த 3,627 பேருக்கு, 13.67 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணியருக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, ஆர்.பி.எப்., ரயில்வே போலீஸ் இணைந்து, 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

.சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடங்களில் தினமும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.இவற்றின் வாயிலாக தினமும், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.பயணியர் சிலர், பாதுகாப்பு விதியை மீறி, ரயில் படியில் தொங்கியபடி பயணிப்பது, மொபைல்போனில் பேசியபடி ரயில் பாதையை கடப்பதுடன், ரயில் இன்ஜின் முன்பு 'செல்பி' எடுக்கின்றனர்

.இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரிகள் கூறியதாவது:மின்சார ரயில்களில் பயணத்தின் போது, பாதுகாப்பு விதியை மீறி, ரயில்களின் படிகளில் தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணித்தோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அதன்படி, 2020ல் 1,650 பேருக்கு 6.25 லட்சமும், 2021ல் 1,294 பேருக்கு 5.04 லட்சமும், 2022 ஏப்ரல் வரையில் 683 பேருக்கு 2.37 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளோம்.கடந்த 2020 முதல் 2022 ஏப்ரல் வரையில் மொத்தம், 3,627 பேருக்கு, 13 லட்சத்து 67 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்.

இதேபோல், மின்சார ரயில்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள ஆர்.பி.எப்., ரயில்வே போலிசார் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 10 குழுக்கள் வாயிலாக, தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.ஒவ்வொரு குழுவிலும் இரண்டு முதல் நான்கு பேர் வரை இருப்பர். பயணியருக்கு இடையூறு ஏற்படுத்துவோர், விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X