மோச்சேரியில் துரியோதனன் படுகளம் விமரிசை
Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மதுராந்தகம்: மோச்சேரி திரவுபதியம்மன் கோவிலின் துரியோதனன் படுகளம் நேற்று விமரிசையாக நடந்தது.மதுராந்தகம் அடுத்த மோச்சேரியில், பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த உற்சவம், இம்மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி, கடந்த 8ம் தேதி முதல் தினமும் மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.கடந்த, 15ம் தேதி முதல் தினமும் இரவு 9:00 மணிக்கு, பாரதமாதா நாடக சபாவின் மகாபாரத தெருக்கூத்து நாடகம் நடந்தது.நேற்று காலை 10:00 மணிக்கு அரவான் களபலி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. திரவுபதி அம்மனுக்கு, துரியோதனின் கூந்தல் முடித்து, பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. பூங்கரகம் அலங்கரித்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.இன்று, பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில்நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X