மதுரை : 'வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் அகழி, சோலார் வேலி அமைக்க அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது' என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவினர் சாகுபடி செய்த கருப்பு கவுனி அரிசி விற்பனையை கலெக்டர் அனீஷ் சேகர் துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த விவாதம்:ராமர், உசிலம்பட்டி: சேடபட்டி, பேரையூர், எழுமலை, உசிலம்பட்டி பகுதிகளில் மல்லிகை சாகுபடி அதிகமாக உள்ளதால் இங்கு சென்ட் தொழிற்சாலை அமைக்கவேண்டும்.ரேவதி, துணை இயக்குனர், தோட்டக் கலை: ஆண்டு முழுவதும் பூக்கள் கிடைத்தால் தான் சென்ட் தொழிற்சாலை அமைக்க முடியும். யூனிட் அமைக்க குறைந்தது ரூ.ஒரு கோடி செலவாகும்.
விவசாயிகள்ஒருங்கிணைந்தால் அறிக்கை தயாரிக்கலாம்.கலெக்டர்: விவசாயிகள் குழுவாக இணைந்து செயல்படுங்கள். அதற்கு முன்பாக உங்கள் பகுதியில் பூக்களுக்கான குளிர்பதன கிடங்கு அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆராயப்படும்.மலைச்சாமி, மாங்குளம்: பயிர்க்கடனுக்கு ரூ.3.75 லட்சம் தள்ளுபடி செய்ததால் எனது நகைக்கடனுக்கு தள்ளுபடி வழங்க வேளாண் கூட்டுறவு சங்கம் மறுக்கிறது.ராஜேந்திரன், கூட்டுறவு துணைப்பதிவாளர்: அரசாணை படி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கினால் நகைக்கடனுக்கு வழங்கமுடியாது.ரவி, கொட்டாம்பட்டி: மும்முனை மின்சாரம் எப்போது வழங்குகின்றனர் எனத் தெரியவில்லை. தண்ணீர் பாய்ச்சுவது சிரமமாக உள்ளது.அனிதா மரகதவள்ளி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர்: ஒரு நாளில் பகலில் 6 மணி நேரம், இரவில் 7 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. மாநில மின்பளு பகிர்வு மையம் உத்தரவிடும் நேரத்தில் மின்சாரம் வழங்குகிறோம்.
பழனிசாமி, மேலுார்: மேலுார் பகுதிகளில் தென்னை சாகுபடியாகிறது. இங்கு அரசு நர்சரி பண்ணை இல்லாததால் தரமில்லாத தனியாரிடம் நாற்று வாங்கி ஏமாறுகிறோம். தேசிய சர்க்கரை ஆலை செயல்படாது என தனியார் ஆலை நபர்கள் விவசாயிகளிடம் வதந்தி பரப்புகின்றனர்.கலெக்டர்: ஆலை செயல்படும். தென்னை நாற்று நர்சரி அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.கோபாலகிருஷ்ணன், மேலுார்: வனவிலங்குகள் விளைநிலத்திற்குள் வருவதை தடுக்க முடியாதாமூர்த்தி, வனத்துறை வனவர்: அலங்காநல்லுார், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, பேரையூர், எழுமலை பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம்உள்ளது. இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அகழி, சோலார் வேலி அமைப்பதற்கு அரசுக்குஒப்புதல் அனுப்பியுள்ளோம். வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.முருகன், மண்ணாடி மங்கலம்: ஏ.எஸ்.டி. 16 ரகத்தை பயிரிட்டால் அரிசி மோட்டோவாக உள்ளது. கொள்முதல் மையத்தில் வாங்க மறுக்கின்றனர். வேளாண்மை துறையில் சன்னரக நெல் விதை வேண்டும்.சுப்புராஜ், வேளாண் துணை இயக்குனர்: பி.பி.டி.5204, வி.ஜி.டி.1, டி.கே.எம்.13, ஆர்.என்.ஆர்., ஜெ.ஜி.எல்., மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி சன்னரகங்கள் இருப்பில் உள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.