ஸ்ரீ ஜகத்குரு அறக்கட்டளை கோவையில் யாக பூஜை
Added : மே 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:கோவை ஸ்ரீ ஜகத்குரு அறக்கட்டளை சார்பில், ஜூலை மாதத்தில் மஹா ருத்ரம் மற்றும் ஸ்ரீ சதசண்டி ஜப யக்ஞம் யாக பூஜை நடக்கிறது.கோவையில் ஸ்ரீ ஜகத்குரு அறக்கட்டளை, 42 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக ராமகிருஷ்ண கனபாடிகள் உள்ளார்.இங்கு பெறப்படும் நன்கொடையால் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், வேத பாடசாலையில் வேதம் கற்பித்தல் உள்ளிட்ட பல காரியங்கள் செய்யப்படுகின்றன.


ஸ்ரீசங்கரா கோசாலையால் பசுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. பசுக்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது.கோவை கணபதி விளாங்குறிச்சி ரோடு, ராஜவிக்னேஷ் நகர் ஆரிய வைத்திய சாலை அருகில், கோவை ஸ்ரீ ஜகத்குரு அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அனுக்கிரகத்தால், கர்ம பூமியாக மாற்றும் பணி துவங்கி உள்ளது.இந்த இடத்தில், ஸ்ரீ மஹா ருத்ரம் மற்றும் ஸ்ரீ சதசண்டி யாகம், ஜூலை 17 முதல், 22 வரை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடை மற்றும் பொருளுதவி அளித்து இந்த தர்ம காரியத்தில் பங்கு பெற்று ஸ்ரீ ஜகத்குரு ஆச்சாரியர்களின் அனுக்கிரகத்தை பெற வேண்டும் என, கோவை ஜகத்குரு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.நன்கொடை அளிப்பவர்கள் பெயர் மற்றும் முழு விபரம், மொபைல் எண் ஆகியவற்றை கொடுத்து இ-மெயில் அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக தெரிவித்து, ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் விபரங்களுக்கு, 98422 91882, 99445 49621 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X