திருப்போரூர், திருப்போரூர் வட்டத்தில் திருப்போரூர், நெல்லிக் குப்பம், கரும்பாக்கம், கேளம்பாக்கம், மானாம்பதி, பையனுார் ஆகிய ஆறு உள்வட்டங்கள் உள்ளன.பொதுமக்களின் மனுக் களுக்கு தீர்வு காணும் ஜமாபந்தி நிகழ்ச்சி, மேற்கண்ட உள்வட்டங்களுக்கு வரும் 31 முதல், ஜூன் 8ம் தேதி வரை நடக்க உள்ளது.இதில், 31ல் திருப்போரூர்; 1ல் நெல்லிக்குப்பம்; 2ல் கரும்பாக்கம்; 3ல் கேளம்பாக்கம்; 7ல் மானாம்பதி; 8ல் பையனுார் உள்ளவட்டங்களில் நடக்கிறது. பட்டா பெயர் மாற்றம், பெயர் திருத்தம், பட்டா கோருதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை, இம்முகாமில் மேற்கொள்ளலாம்.